திடீரென மும்பை திரும்பிய பும்ராஹ்… ஆசிய கோப்பை தொடரிலும் விளையாட மாட்டாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வரும் இலங்கையில் இருந்து இந்திய அணியின் சீனியர் வீரரான பும்ராஹ் திடீரென இந்தியா திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய – பாகிஸ்தான் இடையேயான போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நேப்பாள் அணியை எதிர்கொள்ள உள்ளது, அதன்பின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
எஞ்சியுள்ள ஒவ்வொரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரரான பும்ராஹ் திடீரென இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பும்ராஹ் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென மும்பை திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை திரும்பியுள்ள பும்ராஹ், ஆசிய கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன் இந்திய அணியில் மீண்டும் இணைந்து கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.