ஷாகின் அப்ரிடி மாதிரி எங்ககிட்டயும் எல்லா திட்டமும் இருக்கு; ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய நேப்பாள் கேப்டன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்ற தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக நேப்பாள் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்திய அணி அடுத்ததாக நேப்பாள் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா – நேப்பாள் இடையேயான போட்டி செப்டம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டி குறித்து பேசிய நேப்பாள் அணியின் கேப்டனான ரோகித் பவுடல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்ற தேவையான அனைத்து திட்டங்களுடன் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேப்பாள் அணியின் கேப்டனான ரோகித் பவுடல் பேசுகையில், “இந்திய அணிக்கு எதிரான போட்டிக்காக நாங்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளோம். இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக நேபாளிற்காக விளையாட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவும், இந்திய அணியும் மிகப்பெரியது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களாக திகழ்ந்து வருகிறார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்ற தேவையான திட்டங்கள் எங்களிடமும் உள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்துவோம் என முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.