இந்தியா – நியூஸிலாந்து: 2வது போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?

WELLINGTON, NEW ZEALAND - FEBRUARY 03: Colin de Grandhomme of New Zealand leaves the field after being dismissed during game five in the One Day International series between New Zealand and India at Westpac Stadium on February 03, 2019 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. மூன்று 20 ஓவர் தொடரில் வெல்லிங்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன் முலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை (8-ந்தேதி) நடக்கிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரோகித்சர்மா தலைமையிலான அணி நாளை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீண்டும் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது.

வெல்லிங்டன் போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையும் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாளைய போட்டியில் இதை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டோனி, தவான் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் மற்ற வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பந்து வீச்சும் ஏமாற்றத்தை அளித்தது. வேகப்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்தனர். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் நாளைய ஆட்டத்துக்கான அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2-வது 20 ஓவர் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது. ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து 20 ஓவர் தொடரை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.

அந்த அணியின் தொடக்க வீரர் டிம் செய் பெர்ட் இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினார். இதே போல முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டி தொடர்பாக பேசியுள்ள நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “கடந்த டி20 போட்டி சிறப்பான ஒன்று. இது அனைத்தையும் திருப்திபடுத்தும் வகையிலும் அமைந்தது. நாங்களும் இந்திய அணியும் திறமைகளை பரிமாறிக்கொண்டோம். இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியை எங்கள் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அதன்படியே நாங்கள் வென்று முன்னேறிச்செல்வோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இரு அணிகளும் நாளை மோதுவது 10-வது போட்டியாகும். இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 2-ல், நியூசிலாந்து 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.