நியூசிலாந்து அணியின் கனவை தகர்த்த ரோஹித் சர்மா; இந்திய அணி மிரட்டல் வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி.20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 65 ரன்களும், விராட் கோஹ்லி 38 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 9 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் 8 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் போட்டி டிராவில் முடிந்தது.
இதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில், ஜஸ்ப்ரிட் பும்ராஹ் சொதப்பியதால் நியூசிலாந்து அணி 17 ரன்கள் குவித்தது.
சூப்பர் ஓவரில் 18 ரன்கள் எடுப்பது சாத்தியம் இல்லாதது என்று கருதப்பட்ட நிலையில், சூப்பர் ஓவரில் விளையாட களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் தங்களது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு கடைசி பந்தில் செம மாஸான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதில் குறிப்பாக கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் அந்த இரண்டு பந்துகளையும் சிக்ஸர் பறக்கவிட்ட ரோஹித் சர்மாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதில் சில இங்கே;