ஒதுக்கி வைக்கல… ஒளிச்சு வச்சிருக்காங்க; 5 விக்கெட்டுகளை அள்ளிய முகமது ஷமி; பாராட்டும் கிரிக்கெட் உலகம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.
தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமும் அடித்த டேரியல் மிட்செல் 130 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் முகமது ஷமியின் பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உலகக்கோப்பை தொடரின் கடந்த நான்கு போட்டிகளிலும் விளையாடாத முகமது ஷமி, நியூசிலாந்து அணியுடனான இந்த போட்டியின் மூலம் எண்ட்ரீ கொடுத்தார்.
தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து தனது எண்ட்ரியை தரமானதாக்கிய முகமது ஷமி, ரச்சின் ரவீந்திரா, டேரியல் மிட்செல் உள்பட ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி பல்வேறு சாதனைகளும் படைத்தார்.
இந்தநிலையில், இந்த போட்டியில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முகமது ஷமிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் முகமது ஷமியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதில் சில;