தப்ப திருத்துக்கணும்னு இந்திய அணிக்கு கொஞ்சம் கூட எண்ணம் கிடையாது ; முக்கிய வீரர் நீக்கம் குறித்து தொட்டா கணேஷ் விமர்சனம் !!

தப்ப திருத்துக்கணும்னு இந்திய அணிக்கு கொஞ்சம் கூட எண்ணம் கிடையாது ; முக்கிய வீரர் நீக்கம் குறித்து தொட்டா கணேஷ் விமர்சனம் ….

இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்தபோதும் இந்திய அணி தன்னுடைய தவறை திருத்திக் கொள்ளவில்லை என்று தொட்டா கணேஷ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது.

இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயல் நாட்டு மண்ணில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தாலும் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரரை அணியில் இணைக்காமல் போனது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

வெற்றியை விட சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கொடுப்பதே முக்கியம் என்ற அளவுக்கு விமர்சனம் அதிகரித்து வருவதால், அது சம்பந்தமான கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை அறிவுப்பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தொட்டா கணேஷ், இந்திய அணி தான் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று சஞ்சு சம்சன் நீக்கம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொட்ட கணேஷ் தெரிவித்ததாவது,“சஞ்சு சாம்சன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியவில்லை, சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயரை ஆடும் லெவனில் எடுத்ததை வைத்து பார்த்தால் இந்திய அணி தன்னுடைய தவறிலிருந்து எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. மேலும் t20 தொடரில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவும் இந்திய அணி முயற்சி செய்யவில்லை” என சாஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து விமர்சனத்துடன் கூடிய கருத்துக்களை தொட்டா கணேஷ் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.