என்னதான் சிராஜ், ஷமி எல்லாம் மாஸ் காட்டுனாலும்… பும்ராஹ் இல்லாதது கஷ்டம் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !!

என்னதான் சிராஜ், ஷமி எல்லாம் மாஸ் காட்டுனாலும்… பும்ராஹ் இல்லாதது கஷ்டம் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக்

பும்ரா அணியில் இடம்பெறாதது மிகப்பெரிய இழப்பு என்பதை ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும் என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் தவிக்கிறார். ஆசியகோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர் என இரண்டிலும் அவரால் விளையாட முடியவில்லை.இதனால் இந்திய அணி பந்துவீச்சில் எப்படி தடுமாறியது என்பதை அனைவருமே கண்டோம்.

பும்ரா இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணி பல்வேறு வீரர்களை பயன்படுத்தி வருகிறது. உம்ரான் மாலிக், குல்தீப் சென், தீபக் சகர், ஆவேஷ் கான் என பலரும் அந்த இடத்திற்கு வந்து சென்று விட்டனர். தற்போது வரை பும்ரா இல்லாமல் இந்திய அணி பின்னடைவில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

தற்போது பும்ரா காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்தாலும் அவருக்கு இந்திய அணி ஓய்வை கொடுத்து, முக்கியாமன போட்டிகளில் பயன்படுத்துவதற்காக வைத்துள்ளது.ஆனால் இப்படி குணமான வீரரை விளையாட விடமால் ஓய்வில் வைத்துள்ளது சரியான முறை கிடையாது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே செய்தியாளர் சந்திப்பில் பும்ரா அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்பதை வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இதுகுறித்து பரஸ் மாம்ப்ரே பேசுகையில்,“பும்ரா தனித்துவமான ஒரு வீரர் அவரை போன்ற ஒரு வீரரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பும்ரா அணியில் இருப்பதால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் அது லாவகமாக அமையும்,எப்படிப்பட்ட மைதானமாக இருந்தாலும் பும்ராவின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும். அவருடைய பந்துவீச்சை பார்க்கும் பொழுது போட்டியின் நிலை எப்படி உள்ளது, எந்த மாதிரி எல்லாம் பந்து வீசுகிறார்கள்,எதை செய்துள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரியும். அவர் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். தற்பொழுது பும்ரா தயாராகிவிட்டார், அவர் எந்த போட்டியிலாவது களமிறங்கலாம் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.