வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டி!! சோகத்தில் உள்ள இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

அதிக பார்வையாளர்கள் கொண்ட போட்டியாக இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டி சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவுபெறும் தருவாய்க்கு வந்துள்ளது. நாளை (ஜூலை 14) நடைபெறும் இறுதி போட்டி மட்டுமே மீதமுள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பிர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நாளை (ஜூலை 14) லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

இந்நிலையில், மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக அதிகம் பேர் கண்டுகளித்தப் போட்டியாக சாதனை படைத்துள்ளது.

தொலைக்காட்சி மற்றும் இணைய தளத்தில் இப்போட்டியை கண்டுகளித்தவர்கள் மொத்த எண்ணிக்கையை அதிகார்பூர இணையதளத்தில் ஐசிசி இன்று வெளியிட்டது. அதில் இந்தியாவில் பிரபலமான ஸ்டார் நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் செயலி மூலம், இந்தப் போட்டியை சுமார் 2.5 கோடி பேர் கண்டுகளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒருபோட்டியை 1.86 கோடி பேர் கண்டுகளித்ததே சாதனையாக இருந்து வந்துள்ளது.

அதேநேரம் வெளியிட்ட தகவலில், லீக் சுற்றில் இங்கிலாந்து-இந்தியா மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போட்டிகளை 4 லட்சத்து 65 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

Prabhu Soundar:

This website uses cookies.