சீனியர் வீரரா இருந்தா என்ன..? அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை; இரண்டாவது டி.20 போட்டியில் இவர்களுக்கு தான் இடம் கிடைக்கும்; அஸ்வின் கணிப்பு
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்தான தனது கணிப்பை இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வின் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளனர். உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 20ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான இந்த தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வின், இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்கும் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.
துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷனிற்கு இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அஸ்வின், மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ள அஸ்வின், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என கணித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்யாத ரவிச்சந்திர அஸ்வின், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், அர்ஸ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
அஸ்வின் கணித்துள்ள ஆடும் லெவன்;
சுப்மன் கில், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.