அவுங்க அடிச்சுகுவாங்கன்னு நினைக்காம கொஞ்சம் பொறுப்பா செயல்படுங்க ; ரோஹித் சர்மாவை விமர்சித்து முன்னாள் வீரர் பேட்டி..
விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை தவிர்த்து அணியில் இருக்கும் மற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு விதமான மாற்றங்களுடன் ஒரு நாள் போட்டிகளை விளையாடி வரும் இந்திய அணி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இருதரப்பு ஒரு நாள் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை 3-0 என வாஷ்-அவுட் செய்த இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த ஒட்டுமொத்த தொடரிலும் இந்திய அணி வெறும் இரண்டு வீரர்களின் பங்களிப்பாலே வெற்றி பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது, அந்த அளவிற்கு இந்த இரு தரப்பு தொடரில் தனிப்பட்ட வீரர்களில் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது.
குறிப்பாக இந்த தொடரில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. ஆனால் எப்பொழுதுமே இந்த இரண்டு வீரர்களை நம்பியே இருக்க முடியாது என்பதால் மற்ற பேட்ஸ்மன்களுக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் வாஷிம் ஜாஃபர் எதிர்வரும் நியூலாந்து அணிக்கு எதிரான மற்ற போட்டிகளில் ரோகித் சர்மா, சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் போன்ற வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து வாஷிம் ஜாபர் பேசுகையில்,“இனி வரும் போட்டிகளில் ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் கொஞ்சமாவது பொறுப்புடன் விளையாட வேண்டும் குறிப்பாக ரோஹித் சர்மா சதம் அடித்து பல மாதங்கள் ஆகிவிட்டது, அவர் சிறப்பாக செயல்பட்டாலும் அவருடைய பேட்டிங்கிலிருந்து நாம் மூன்று இலக்க ரண்களை இதுவரை பார்க்க முடியவில்லை. எனவே இதையெல்லாம் உணர்ந்து இவர்கள் அனைவரும் பொறுப்புடன் விளையாட வேண்டும்” என வாஷிம் ஜாபர் அறிவுரை கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.