இந்த மூன்று காரணங்களை வைத்து பார்த்தால் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணியே வெல்லும்..
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடருக்காக இந்திய அணி அடுத்த சில தினங்களில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரை போலவே இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று காரணங்களை வைத்துப் பார்த்தால் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெல்வதற்கே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
அப்படிப்பட்ட மூன்று காரணங்கள் இங்கு பார்ப்போம்..
பலமான மிடில் ஆர்டர்.
மற்ற அணிகளை ஒப்பிடுகையில் இந்திய அணியின் நெடுநாதர் சற்று அதிக பலம் பொருந்தியதாகவே உள்ளது, இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இந்திய அணி மிகவும் பலமாகவே உள்ளது, இதன் அடிப்படையில் வைத்து பார்த்தால் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.