விராட் கோலியின் சாதனை காலி., மாபெரும் சாதனைக்கு சொந்தககாரரான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் !!

விராட் கோலியின் சாதனை காலி., மாபெரும் சாதனைக்கு சொந்தககாரரான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்..

விராட் கோலியின் சாதனையை முறியடித்து மிகப்பெரிய சாதனையை பதிவு செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நேபாள் அணியும் மோதியது.பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதனால் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு நேபால் பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 342 ரன்கள் என்ற இலக்கை நேபால் அணிக்கு நிர்ணயித்தது.

பாகிஸ்தான் அணிக்காக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும்,இப்திகார் அஹமது 109* ரங்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.

இதன்பின் 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை நோக்கி களமிறங்கிய நேபால் அணி,பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்கள் எடுத்த நிலையில் தன்னுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து பாகிஸ்தான் அணியிடம் பரிதாப தோல்வியை தழுவியது.

விராட் கோலியின் சாதனையை முறியடித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்..

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேபாள் அணிக்கு எதிராக 151 ரன்கள் அடித்ததன் மூலம் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஆசிய கோப்பையில் ஒரு கேப்டனாக 150 ரன்கள் கடந்த வீரர் என்ற வரிசையில் பாபர் அசாம் முதலிடத்தில் பிடித்துள்ளார். இதற்கு முன்பு ஒரு கேப்டனாக ஆசியக் கோப்பையில் அதிக ரன்கள் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் வங்கதேச அணிக்கு எதிராக விராட் கோலி 131 ரன்கள் அடித்திருந்தார்.தற்போது அந்த சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.