ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் பாகிஸ்தான் அணியில் நிச்சயம் தேவை என்று அக்கிப் ஜாவித் தெரிவித்துள்ளார்.
கடந்த உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்து வீச முடியாமல் போனதால் போனதால் இந்திய அணி பவுலிங் ஆப்சன் இல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் மிக மோசமாக விளையாடி அரை இறுதிசுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இத்துடன் ஹர்திக் பாண்டியாவின் சகாப்தம் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்த்து நிலையில் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் ரீ-என்றி கொடுத்து இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறார்.
மற்ற வீரர்களுக்கு எல்லாம் பேக்கப் வீரர் என்ற ஒருவர் இருக்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் வேகப்பந்து வீசக்கூடிய திறமையான ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இல்லை என்பதால் ஹர்திக் பாண்டியா மற்ற வீரர்களை விட சற்று தனித்துவமாக பார்க்கப்படுகிறார்.
குறிப்பாக இந்திய அணியில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் ஹர்திக் பாண்டியா தனித்துவமான ஒரு வீரராக பார்க்கப்படுகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் தங்களது அணியில் இருந்தால் நிச்சயம் அது அணிக்கு பல்வேறு விதமான வகையிலும் சாதகமாக அமையும் என்று பல அணிகளில் இருக்கும் முன்னாள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அக்கிப் ஜாவித், ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் பாகிஸ்தான் அணியில் இருந்தால் அணியின் தரமே அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விடும் என்று ஹர்திக் பாண்டியா குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து அக்கிப் ஜாவித் பேசியதாவது, “இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பொக்கிஷமே ஹர்திக் பாண்டியா தான், பாகிஸ்தான் அணியில் இது போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது, இவர் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அப்துல் ரஜாக்கை விட சிறந்த வீரராக உள்ளார். பாகிஸ்தான் அணி டி20 போட்டியில் வளர வேண்டும் என்றால் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்ரவுண்டரை அணியில் இணைக்க வேண்டும், ஏனென்றால் டி20 தொடரில் எத்தனை ஆல்ரவுண்டர்கள் அணியில் உள்ளார்கள் என்பது போட்டியின் முடிவுகளை மாற்றலாம்.இந்திய அணியில் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் உள்ளதும், பாகிஸ்தான் அணியில் அவர்களைப் போன்ற வீரர்கள் இல்லாததும் தான் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம்”என்று அக்கிப் ஜாவித் பேசியிருந்தார்.
ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு தற்பொழுது கிடைத்துள்ளது, இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தை காட்டுகிறது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.