பாகிஸ்தான் மொக்க டீம் தான்… ஆனா இத  மட்டும் யாருமே ஏத்துக்க மாட்டாங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் இந்திய வீரர் !!

பாகிஸ்தான் மொக்க டீம் தான்… ஆனா இத  மட்டும் யாருமே ஏத்துக்க மாட்டாங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் இந்திய வீரர்

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில்  இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி துவங்கிய இந்த தொடரில் இதுவரை 15 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியும் ஒரு சாதரண போட்டி தான் என்றாலும், பல்வேறு அரசியல் காரணங்களால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி ஒரு கிரிக்கெட் போராகவே பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கம் போல் இந்த முறையும்  இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எதிர்வரும் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில், “பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் தான் என்றாலும், தோல்வியை யாராலும் ஏற்று கொள்ள முடியாது, அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தால் அதை யாருமே  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தான் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறுகிறேன். பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அது உலகக்கோப்பையை வென்றதற்கு சமம்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய சித்து, “பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் பலவீனமாக உள்ளது என்பதே உண்மை. பாகிஸ்தான் அணி டி.20 போட்டியிலும் டெஸ்ட் போட்டிகளை போன்று பொறுமையாக விளையாடுவதே அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணம். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, தற்போது அமெரிக்கா போன்ற சிறிய அணியுடனும் தோல்வியை சந்தித்தது, இதற்கு முக்கியமான காரணம் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தான். ஆனால் இந்திய அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.