டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடப்பதே சந்தேகம் என தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டி அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
இதில் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே வழக்கம் போது மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில், மழை காரணமாக இந்த போட்டி நடைபெறுவதே சந்தேகம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ள மெல்போர்னில் காலை மற்றும் மாலை இரு வேளையும் மழை பெய்வதற்கு 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மழையால் இந்த போட்டியை நடத்த முடியாமல் போனால் இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ரிசர்வ் டே இல்லாததால் போட்டிக்கான புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.