எழுதி வச்சுக்கோங்க..விராட் கோலியால் பாகிஸ்தான் அணி சிக்கி சின்னாபின்னமாகப்போகுது ; பாகிஸ்தான் அணிக்கு சவால் விட்ட முன்னாள் இந்திய வீரர் !!

எழுதி வச்சுக்கோங்க..விராட் கோலியால் பாகிஸ்தான் அணி சிக்கி சின்னாபின்னமாகப்போகுது ; பாகிஸ்தான் அணிக்கு சவால் விட்ட முன்னாள் இந்திய வீரர்..

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியால் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை தொடர், கடந்த 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறத. இதில் முதல் போட்டியாக விளையாடிய பாகிஸ்தான் மற்றும் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்மே பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ளதால், இது சம்பந்தமான சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பல தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஆசியக் கோப்பை தொடர் குறித்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்தும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரியப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப்.,பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகமது கைஃப் தெரிவித்ததாவது.,

“கடந்த வருட டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விராட் கோலி ஒவ்வொரு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களும் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார்.அது பாகிஸ்தான் அணியின் ஸ்டார் பந்துவீச்சாளர்களான நசிம் ஷா-வாக, இருந்தாலும் அல்லது ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃபாக இருந்தாலும் சரியே..

“விராட் கோலி அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவர்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை விராட் கோலி தெரிந்து வைத்துள்ளார்.நிச்சயம் இதனால் விராட் கோலியால் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மேலும் தற்போது பார்மில் உள்ள விராட் கோலியை சமாளிப்பதற்கு பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் தினறுவார்கள். மேலும் அவர்களுக்கு இதன் மூலம் நெருக்கடி ஏற்படும்” என்றும் முகமது கைஃப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.