2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோகித் சர்மா ஏன் எடுக்கப்படவில்லை? அவருக்கு பதிலாக யார் எடுக்கப்பட்டார் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் விரேந்திர சேவாக்.
2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ரோகித் சர்மா எடுக்கப்படாதது குறித்து சேவாக் பேசியதாவது:
ரோகித் சர்மா இப்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தாலும், அப்போது யார் கவனத்திலும் ஈர்க்கப்படாத வீரராகவே இருந்தார். மேலும் நான் தேர்வுக்குழு தலைவர் ஆகவோ, கேப்டன் ஆகவோ இருந்திருந்தால் அவரை எடுத்திருப்பேன் ஆனால் அப்போதைய கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவரின் முடிவு வேறாக இருந்திருக்கிறது.
அந்த சமயத்தில் ரோகித் சர்மாவா அல்லது யூசுப் பாதானா என்கிற விவாதம் இருந்தது. யூசுப் பதான் உலக கோப்பைக்கு முன்பு சில முக்கியமான ஆட்டங்களில் கடினமான சூழலில் நன்றாக பேட்டிங் செய்திருந்தார். அதன் காரணமாக ரோகித் சர்மாவை விளக்கி விட்டு அவரை எடுத்திருக்கக்கூடும்.
அப்போது ரோகித் சர்மாவிற்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு அவரது பேட்டிங் அடுத்த கட்டத்திற்கு சென்று இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது. இதுபோல தனது பின்னடைவு காலகட்டத்தை உத்வேகமாக எடுத்துக்கொண்டு நன்றாக செயல்படுவது சிறந்தது என்றார் சேவாக்.