ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்தியாவிற்கு வரும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலர் ஓய்வு இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக விளையாடி வருவதாலும், ஜூலை மாத துவக்கத்தில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டும், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் பலருக்கு அணியில் இடம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
அப்படி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ள 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
திலக் வர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா, 2022 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் பங்கேற்று 368 ரன்கள் எடுத்துள்ளார். இவரே மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
மிடில் ஆர்டர்களில் பேட்டிங் செய்யக் கூடிய திறமை படைத்த இவர் நிச்சயம் எதிர்கால இந்திய அணியின் முக்கிய வீரராக செயல்படுவார் என ரோஹித் சர்மாவே இவரை பாராட்டியதால், எதிர்வரும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.