இப்பவாச்சும் புரிஞ்சுக்கங்க… அவர் அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சர்ச்சை கருத்து !!

லிமிடெட் ஒரு போட்டிகளில் இந்திய அணி அஸ்வினை நீக்கிவிட்டு குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்ததுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது.


மூன்றாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும், இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை முழுமையாக இழந்துவிடும் என்பதால், ஒரு போட்டியிலாவது வெற்றி பெற இந்திய அணி நிச்சயம் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படாத ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், பிரசீத் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.

இந்த தொடரில் தோல்வியை தழுவியதால் இனிவரும் லிமிடெட் ஓவர் தொடரிலாவது இந்திய சிறப்பாக செயல்பட பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் சஹால் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்,இருவரும் சேர்ந்து 20 ஓவர்களில் 115 ரன்கள் குடுதனர்,இதில் அஸ்வின் 68 ரன்கள் கொடுத்தார்.

இதனால் சர்ச்சைக்கு பெயர்போன கிரிக்கெட் ஆலோசகர் சஞ்சய் மஞ்சரெக்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் அஸ்வினை நீக்கிவிட்டு குல்தீப் யாதவிர்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது,நான் இந்திய அணி லிமிடெட் ஓவர் போட்டிகளில் அஸ்வினை மீண்டும் விளையாடவைத்ததிலிருந்தே அஸ்வினின் தேர்வு இந்திய அணிக்கு தேவை இல்லை என்று பேசிவந்தென், அதேபோன்று தற்பொழுது நடைபெற்று விட்டது, லிமிடெட் ஓவர் போட்டியில் அஸ்வினின் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை,இதை இந்திய அணி தற்போது நன்கு உணர்ந்திருக்கும், அஸ்வின் மற்றும் சகால் ஆகிய இருவரின் சுழற்பந்து ஜோடி ஒத்துப் போகவில்லை,இதனால் இந்திய அணி முன்பு பயன்படுத்தியது போல் சஹாலுடன் குல்திப் யாதவை விளையாட வைக்க வேண்டும், இதுதான் குல்தீப் யாதவை மீண்டும் இந்திய அணியில் இணைப்பதற்கு சரியான நேரம் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.