தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் டெஸ்ட் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒருதலைப்பட்சமாக முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் விளையாட முடியாமல் போன 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
1 பிரஷீத் கிருஷ்ணா
வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரசித் கிருஷ்ணா தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இருந்தபோதும் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே இந்திய அணி களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இளம் வீரரான இவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.