முதல் போட்டியில் இந்தியா ஆடும் மைதானம் எப்படிப்பட்டது தெரியுமா? விவரம் இங்கே!

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மோதும் முதல் ஆட்டம் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் இரு அணிகளும் மோதும் சவுத்தம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தை குறித்து ஓர் அலசல்.

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையான ஆட்டம் நடைபெறும் இந்த தி ரோஸ் பவுல் மைதானம் , தி ஏஜிஸ் பவுல் மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது.

சவுத்தாம்ப்டனில் அமைந்திருக்கும் இந்த தி ரோஸ் பவுல் மைதானம், 2001 இல் நிறுவப்பட்டது. இந்த மைதானம் 6,500 ரசிகர்கள் அமர்ந்து கொள்ளலாம், இருப்பினும் 20,000 பேருக்கு தற்காலிகமாக அமர்ந்து ஆட்டத்தை ரசிப்பதற்க்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

ஏஜிஸ் பவுல் விருது பெற்ற வடிவமைப்பாளர்களான மைக்கேல் ஹாப்கின்ஸ் மற்றும் பார்ட்னர்ஸால் வடிவமைக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பையில், ரோஸ் பவுல் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகளில் நடக்க உள்ளது. முன்னதாக,இங்கு 27 ஒரு நாள் சர்வதேச அரங்கில் நடத்தப்பட்டுள்ளது. இதில், 10 ஆட்டங்கள் சொந்த அணியும், 7 ஆட்டங்கள் சுற்றுப்பயண அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 373 ரன்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்த மைதானத்தில் குறைந்தபட்சமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக யுனைடெட் ஸ்டேஸ் 65 எடுத்துள்ளது.

India’s Kuldeep Yadav, left, celebrates with captain Virat Kohli the dismissal of Bangladesh’s Mosaddek Hossain during the Cricket World Cup warm up match between Bangladesh and India at Sophia Gardens in Cardiff, Wales, Tuesday, May 28, 2019. (AP Photo/Aijaz Rahi)

உலக கோப்பையை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்று இருக்கிறது.

இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செஞ்சேரியனில் நடந்த போட்டியில் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை ரோஸ் பவுல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sathish Kumar:

This website uses cookies.