தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டி.20 போட்டி… முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !!

தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டி.20 போட்டி... முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 2தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டி.20 போட்டி... முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 2

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டி.20 போட்டி... முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 1தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டி.20 போட்டி... முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 1

கவுஹாத்தி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. தப்ரைஸ் ஷம்சி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லுங்கி நிகிடி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில், கடந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்‌ஷ்ர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், ஹர்சல் பட்டேல், தீபக் சாஹர், அர்ஸ்தீப் சிங்.

இரண்டாவது டி.20 போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியின் ஆடும் லெவன்;

குவிண்டன் டி காக், டெம்பா பவுமா, ரீலே ருச்சோவ், மார்கரம், டேவிட் மில்லர், ஸ்டப்ஸ், வேய்ன் பர்னல், கேசவ் மஹராஜ், காகிசோ ரபாடா, அன்ரிக் நோர்கியா, லுங்கி நிகிடி.

 

Mohamed:
whatsapp
line