தென்னாபிரிக்கா பேட்ஸ்மேன்கள் அடிக்கணும்னே இந்தியா பந்துவீசுனாங்க, அதான் தோத்துட்டோம்; இந்தியாவை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்!!

இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றதற்கு முக்கிய காரணமாக இதுதான் இருக்கிறது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவுற்று இருக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் 1-1 என கணக்கில் டெஸ்ட் தொடர் சமனில் இருக்கிறது.

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இருந்தாலும், அதன் பின்னர் விக்கெட் எடுக்க முடியாமல் மிகவும் திணறினர். கேப்டன் டீன் எல்கர் நங்கூரம் போல் நிலைத்து நின்று அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு பக்கபலமாக பீட்டர்சன், வேண்டர் டசன் மற்றும் பவுமா ஆகியோர் இருந்தனர். 

மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும், தனது பந்துவீச்சு எந்த அளவிற்கு இருக்கிறது என்று. ஆனால் அதனை சரிசெய்து கொள்ளாமல், நான்காவது நாளிலும் அதே தவறை மீண்டும் மீண்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் செய்திருக்கின்றனர். 

இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “இந்திய அணி 240 ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ஜோகன்னஸ்பர்க் மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது. ஆகையால் பேட்ஸ்மேன்கள் பந்தை அணிக்க முயற்சிப்பார்கள். இந்த சமயத்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீசியிருக்கவேண்டும். ஆனால் நேராக ஸ்டம்பை நோக்கி பந்து வீசியதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் நன்றாக விளையாடி விட்டனர். இதனால் இந்திய அணிக்கு விக்கெட்டும் விழவில்லை, ரன்களும் சென்றுகொண்டிருந்தது. 

நான்காவது நாள் துவங்குவதற்கு முன்பாக இப்படி ஒரு தவறைச் செய்கிறோம் என்று இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தெரியும். ஆனால் நான்காவது நாளில் பந்துவீசும்போதும், அதே தவறை மீண்டும் செய்தனர். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலே கொடுக்கவில்லை என்று உணர்கிறேன். இதான் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.” என பேட்டி அளித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.