தேவைப்பட்டா மட்டும் இதை பண்ணுங்க கோலி; விராட் கோலிக்கு அறிவுரை வழங்கிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் !!

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருந்தபோதும் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி பேட்ஸ்மேனாக மிக மோசமாக விளையாடி வருவதாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறி வரும் விராட்கோலி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராத் கோலி தனது இயல்பான ஆட்டத்தை விட படுமோசமாக விளையாடினார். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் 35 ரன்கள் மற்றும் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் என்ன மாதிரியான பந்திற்கு ஆட்டம் இழந்தாரோ, அதே போலவே இரண்டாவது இன்னிங்சிலும் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஒரே மாதிரியான தவறை விராட்கோலி செய்து வருவதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. விராட் கோலி போன்ற உலகத்தரம் மிக்க வீரர் இப்படி ஒரே மாதிரியான தவறை செய்வதால் மிக எளிதான பந்தில் கூட ஆட்டமிழந்து அணியை பின்னடைவிற்கு தள்ளுகிறார்.

இந்த நிலையில் விராட் கோலியின் இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விளக்கமாக பேசியுள்ளார்.

அதில், “விராட் கோலியின் அந்த பேவரைட் ஷாட் விராட் கோலிக்கு பலமுறை ரன்களை பெற்றுக் கொடுத்துள்ளது, அவர் அந்த ஷாட்டை விளையாட வேண்டும் என்று விரும்புகிறார் ஆனால் என்னை பொறுத்த வரையில் அவர் பலம் என்று நினைக்கும் அந்த செயல் தான் அவருடைய பலகீனமாக மாறிவிட்டது. விராட் கோலி மட்டும் அந்த ஷாட்டை தவிர்த்திருந்தால் அவர் தனது விக்கெட்டை இழந்திருக்க மாட்டார், அந்த ஷாட் ஆடி தான் ரன்களை குவிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. இந்த ஷாட்டை ஆடலாமா..? வேண்டாமா..? என்று கேட்டால் அது விவாதத்திற்கு உட்பட்டதுதான், என்னைப்பொறுத்தவரை பந்துகளுக்கு ஏற்றார்போல் ஷாட் தேர்வு செய்து விளையாட வேண்டும், விராட் கோலி அந்த ஷாட்டை ஆட விரும்பினால் அதற்கு ஏற்ற பந்தில் அதை செய்ய வேண்டும்” என்று விக்ரம் ராத்தோர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.