தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சகர் செய்த சிறிய தவறு குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விரிவாகப் பேசியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியாவில் தனது மானத்தைக் காக்கவாவது கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்டு நாடு திரும்பியுள்ளது.
குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 18 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சஹர் செய்த சிறிய தவறால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இதனால் தென் ஆப்ரிக்கா அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது, தொடர் முடிந்து சில நாட்கள் ஆனாலும் இந்தியன் அணி செய்த தவறு குறித்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விவாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சஹர் செய்த தவறை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அதில், கடைசி பத்து ஓவர் இருக்கும்போது தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தது, குறிப்பாக கடைசி 18 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் தீபக் சாஹர் அவசரப்பட்டு அடித்து ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார், ஏன் தீபக் சஹர் தேவையில்லாத இந்த வேலையைப் பார்த்தார் என்பது தெரியவில்லை, ஒருவேளை பொறுமையாக ஆடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் ஆனால் அடித்து ஆட முயற்சி செய்து தீபக் சஹர் தனது விக்கெட்டை இழந்தது தேவை இல்லாத ஒன்று, இதனால் நான் தீபக் சகரை குறை சொல்லவில்லை, அது குறித்து சற்று சிந்தியுங்கள் என்று கூறுகிறேன், பவுண்டரிகள் அடித்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை சிங்கிள் எடுத்தும் வெற்றி பெறலாம் என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.