138 ரன்களில் ஆல் அவுட்… 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி; இந்திய அணியை ஈசியாக வீழ்த்தி 27 வருட கனவை கனவை நனவாக்கிய இலங்கை !!

138 ரன்களில் ஆல் அவுட்… 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி; இந்திய அணியை ஈசியாக வீழ்த்தி 27 வருட கனவை கனவை நனவாக்கிய இலங்கை

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரை இலகுவாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இந்தியா – இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி டிராவில் முடிந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மிரட்டல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.

கடந்த இரண்டு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்களும், குஷால் மெண்டிஸ் 59 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி, கடந்த போட்டிகளை விட இந்த போட்டியில் பேட்டிங்கில் கடுமையாக திணறியது.

ரோஹித் சர்மா (35) மற்றும் விராட் கோலியை (20) தவிர இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

கடைசி நேரத்தில் தனியாக போராடிய வாசிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்து கொடுத்தார். மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காததால் 26.1 ஓவரில் 138 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.  பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியுள்ள இலங்கை அணி, இதன் மூலம் 1997ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

Mohamed:

This website uses cookies.