அடுத்த சில தினங்களில் இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணி வாய்ப்புள்ளது ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
விருத்திமான் சஹா
வாய்ப்பு கிடைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நீண்ட நாட்களாகவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் விருத்திமான் சஹா, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்தார்.
ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் குழு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சஹாவை தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் அவரிடம் ரஞ்சி கோப்பையில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படும் அறிவுரை வழங்கியுள்ளது.