எதுக்கு இவ்வளவு அவசரம்..? சூர்யகுமார் யாதவை விட துணை கேப்டன் பதவிக்கு சரியான மூன்று வீரர்கள்
இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடர் ஜனவரி 3,5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறாத இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட பட்டாளத்தை இந்திய அணி அறிவித்துள்ளது.
மேலும் இந்த தொடரில் யாரும் எதிர்பாராத விதத்தில் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவை இந்திய அணி துணை கேப்டனாக நியமித்துள்ளது. ஆனால் இந்திய அணியில் எத்தனையோ தகுதியான மற்றும் அனுபவமிக்க வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு சூரியகுமார் யாதவருக்கு கொடுக்கப்பட்டது ஏன் என தெரியாமல் பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவை விட துணை கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியான மூன்று வீரர்கள் குறித்து என் காண்போம்.
அக்சர் பட்டேல்.
தற்போதைய இந்திய அணியில் மூன்று விதமான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
தற்பொழுது 28 வயதாகும் இவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி வருவதால் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களை நன்கு புரிந்து செயல்படுவார் என்பதால் இவரை துணை கேப்டனாக நியமித்திருக்கலாம் என பெரும்பாலான தெரிவித்து வருகின்றனர்.