இப்படி ஒரு கிடைப்பதே ரொம்ப கஷ்டம்… சரியா யூஸ் பண்ணிக்கங்க; இளம் வீரரை புகழ்ந்து பேசிய டாம் மூடி !!

இப்படி ஒரு கிடைப்பதே ரொம்ப கஷ்டம்… சரியா யூஸ் பண்ணிக்கங்க; இளம் வீரரை புகழ்ந்து பேசிய டாம் மூடி

பந்துவீச்சில் தொடர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் இளம் வீரரான உம்ரன் மாலிக்கை பிரபல பயிற்சியாளரான டாம் மூக வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரை இந்திய அணி மிக இலகுவாக கைப்பற்றியதில் இளம் வீரர்களின் பங்களிப்பே மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக உம்ரன் மாலிக், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து இந்திய அணியின் பந்துவீச்சிற்கு வலு சேர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியா இலங்கை இடையேயான நடப்பு கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரான டாம் மூடி, வேகத்தில் எதிரணிக்களை திணறடித்து வரும் உம்ரன் மாலிக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து டாம் மூடி பேசுகையில், “இந்திய அணி உம்ரன் மாலிக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்து அவரது திறமையை சரியாக பயன்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சரியான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே உம்ரன் மாலிக்காலும் நிறைய விசயங்களை கற்று கொள்ள முடியும். ஒவ்வொரு போட்டியிலும் உம்ரன் மாலிக் தனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருவதை நான் கவனித்து வருகிறேன். அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களை போலவும் உம்ரன் மாலிக்கின் சிறந்த பந்துவீச்சை பார்ப்பதற்கு பொறுமையாக காத்திருக்க வேண்டிய அவசியம். என்னை பொறுத்தவரையில் உம்ரன் மாலிக் அரிய வகை வைரத்தை போன்றவர். 150+ வேகத்தில் பந்துவீசக்கூடிய ஒருவர் கிடைப்பதே மிக கடினம், எனவே இந்திய அணி அவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.