தம்பி உம்ரான் மாலிக்.. என்னோட ரெக்காட் பிரேக் பண்றேன்னு கை, காலை உடச்சிக்காதடா – எச்சரித்த சோயிப் அக்தர்!

அதிவேக பந்துவீச்சாளராக திகழ்ந்துவரும் உம்ரான் மாலிக்-கிற்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரையை கூறியுள்ளார் சோயிப் அக்தர்.

இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி துரதிஷ்டவசமாக 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் தற்போது டி20 தொடர் சமனில் இருக்கிறது. மூன்றாவது டி20 போட்டி வருகிற ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடக்க உள்ளது.

இரண்டாவது t20 போட்டியின் போது இலங்கை அணியின் கேப்டன் தாஸுன் ஷனகாவிற்கு உம்ரான் மாலிக் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசினார். சர்வதேச போட்டியில் இந்திய வீரர் வீசிய அதிவேக பந்துவீச்சு இதுவாகும்.

இதற்கு முன்னர் கடந்த 2018-19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியுடன் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா, 153. 2 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது இதனை உம்ரான் மாலிக் முறியடித்திருக்கிறார்.

உம்ரான் மாலிக் ஏற்கனவே கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 157 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். இது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக இருக்கிறது.

சர்வதேச அளவில் அதிவேக பந்துவீச்சு சாதனை சோயிப் அக்தர் வசம் இருக்கிறது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது, இங்கிலாந்து அணிக்கு எதிராக 161 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார்.

விரைவில் உம்ரான் மாலிக் இதனை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, “தற்போது எனது முழு கவனமெல்லாம் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான். ஆகையால் சாதனைகளை முறியடிக்கும் எண்ணமெல்லாம் தற்போது வரை எனக்கு இல்லை.” என்றார்.

இது பற்றி ஜாம்பவான் சோயிப் அக்தரிடம் கேட்டதற்கு, “இத்தனை வருடம் என்னிடம் இருக்கும் இந்த சாதனையை உம்ரான் மாலிக் முறியடித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். முறியடிக்கும் இந்த வேளையில் அவர் எலும்புகள் உடைந்திடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது ஃபிட்டாக இருக்க வேண்டும்.

ஏனெனில் நான் நிறைய காயங்கள் அடைந்திருக்கிறேன். விளையாட்டு வீரருக்கு அவ்வளவு எளிதல்ல. உம்ரான் மாலிக் மிக எளிய இளம் வீரராக இருக்கிறார். காயம் அடைந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு இருக்கிறது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.