கொடுத்தா இந்த இரண்டு வீரர்களில் ஒருவருக்கு தான் ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ கொடுத்திருக்கணும் ;புது சர்ச்சையை கிளப்பிய வாஷிம் ஜாஃபர் !!

கொடுத்தா இந்த இரண்டு வீரர்களில் ஒருவருக்கு தான் ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ கொடுத்திருக்கணும் ;புது சர்ச்சையை கிளப்பிய வாஷிம் ஜாஃபர்..

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்த வீரருக்கு தான் பிளேயர் ஆப் தி மேட்ச் கொடுத்திருக்க வேண்டும் என வாஷிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி 5 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணமாக திகழ்ந்த சிவம் மாவி மற்றும் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அக்சர் பட்டேல் ஆகிய இரு வீரர்களையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆனால் இந்த இரண்டு வீரர்களில் ஒருவருக்கு பிளேயர் ஆப் தி மேட்ச் கொடுக்காமல், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட தீபக் ஹூடாவிர்க்கு பிளேயர் ஆப் தி மேட்ச் கொடுக்கப்பட்டது.ஆனால் இது சரியான முடிவு கிடையாது, என ஒரு சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் இடம்பெற்றிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர் அக்சர்பட்டேல் அல்லது சிவம் மாவி ஆகிய இருவரில் ஒருவருக்கு பிளேயர் ஆப் தி மேட்ச் கொடுத்திருக்க வேண்டும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிம் ஜாஃபர் தெரிவித்ததாவது,“நானாக இருந்தால் பிளேயர் ஆப் தி மேட்சை சிவம் மாவி அல்லது அச்சர் பட்டேலுக்கு கொடுத்திருப்பேன், அக்சர் பட்டேல் கடைசி ஓவர் வீசிய விதமும் மற்றும் இந்திய அணிக்காக அவர் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது, ஆனால் இந்திய அணி 160 ரன்கள் குவிப்பதற்கு காரணமாக இருந்த தீபக் ஹூடாவிர்க்கு,ப்ளேயர் ஆப் தி மேட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி டிபன்ட் செய்வதற்கு 160 ரன்கள் என்பது போதுமானதாக இல்லை,அதை பந்துவீச்சாளர்கள் மிக சிறந்த முறையில் கட்டுப்படுத்தினார்கள். அவர்கள் மட்டும் இது போன்ற பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை என்றால், இந்திய அணி தோல்வியை தழுவியிருக்கும். அதனால் மாவி அல்லது கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அக்சர்பட்டேல் ஆகிய இருவருக்கு தான் நான் ப்ளேயர் ஆப் தி மேட்சை கொடுப்பேன் என வாஷிம் ஜாஃபர் தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.