பங்களாதேஷ் டீம் மாதிரி இலங்கை டீம் இல்ல.. இந்தியா ஜெயிச்சாலும் பெருமை பீத்திக்க வேணாம் – முன்னாள் இந்திய வீரர் பேட்டி!

இலங்கை அணி சுமார்,  ஒருநாள் தொடரை இந்திய அணி ஈசியாக வெல்லும், ஆனால் பெருமிதம் வேண்டாம் என கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

இந்தியா வந்திருக்கும் இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை 2-1 என்ற கணத்தில் இந்திய அணி கைப்பற்றியது.

முதல் ஒருநாள் போட்டி கவுகாதியில் நடைபெற்றது. இதில் இந்தியா 373 ரன்கள் அடித்தது. விராட்கோலி சதமும், ரோகித் மற்றும் கில் அரைசதமும் அடித்தனர். அடுத்ததாக பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு கேப்டன் ஷனக்கா சதம் விளாசினார். துவக்க வீரர் நிஷன்கா அரைசதமும் அடித்தனர். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. ஆதலால் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றாலும், பெருமிதமாக கருத வேண்டாம். பங்களாதேஷ் அணியை விட பலவீனமாக இலங்கை அணி இருக்கிறது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது:

டி20 போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு இலங்கை அணி சற்று கூடுதலாகவே போராட வேண்டியது இருக்கும். விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருக்கின்றனர். நல்ல பார்மிலும் உள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் அது நன்றாக வெளிப்பட்டது. இவர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அடுத்த போட்டியில் இலங்கை அணி புதிய திட்டங்களுடன் வரவேண்டும். இலங்கை அணியின் பிளேயிங் லெவனை பார்க்கும் பொழுது பின்னடைவாக தெரிகிறது. பவுலிங் வீக்காக தெரிகிறது.

வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது. அதை உதாரணமாகக்கொண்டு இலங்கை அணி நம்பிக்கையாக போராட வேண்டும். அதே நேரம் வங்கதேச அணியுடன் செய்த தவறை இந்திய அணி இம்முறை செய்யாமல் எதிரணியை எளிதாகவும் எண்ணாமல் ஒருநாள் தொடரை எதிர்கொள்ள வேண்டும்.

ஒருவேளை, இலங்கை அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றினாலும் பெருமிதமாக கருதாமல், அணியில் பவுலிங், பேட்டிங் மற்றும் பார்ட்னர்ஷிப் எப்படி உள்ளது. மேம்படுத்த என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும். இந்த தொடரிலிருந்து 50-ஓவர் உலககோப்பையை கவனத்தில் கொண்டு ஆடவேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.