2023 ஒரு நாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் இவர்தான் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

2023 ஒரு நாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் இவர்தான் ; முன்னாள் வீரர் சொல்கிறார்..

2023 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக குல்திப் யாதவ்தான் திகழ்வார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்திய நாட்டில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதால் அதற்கான முன்னற்பாடுகளை ஒவ்வொரு அணியும் செய்து வருகிறது.குறிப்பாக இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு அதிகமான தொடர்களை இந்தியாவில் தான் விளையாட போகிறோம் எனவும் இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து எந்த வீரர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு சரிபட்டு வருவார் என பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

2023 உலகப் கோப்பை தொடரின் முக்கிய சுழற்பந்துவீச்சாளற் குல்தீப் யாதவ் தான்..

இந்த நிலையில் எதிர்வரும் 2023 உலக கோப்பை தொடர் குறித்து பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர், 2023 ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக குல்தி யாதவ்தான் திகழ்வார் என செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பங்கர் தெரிவித்ததாவது “என்னைப் பொறுத்தவரையில் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கிய விரிஸ்ட் ஸ்பின்னர் (wrist spinner) வரிசையில் குல்திப் யாதவ் தான் இடம் பெறுவார். ஏனென்றால் அவர் தற்பொழுது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். என்னை பொறுத்தவரையில் இந்திய அணி முன்னணி பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் தான் முதன்மையானவர். தன்னுடைய பந்துவீச்சில் பல மாற்றங்களை கொண்டு வந்து தன்னுடைய ரன்னப்பையும் சரி செய்து கொண்ட குல்திப் யாதவ், தற்பொழுது மிக சிறந்த முறையில் பந்து வீசுகிறார். தன்னுடைய உடம்பை பந்துக்கு பின்னதாக வைத்து பந்தை அவர் வீசும் விதம் உண்மையில் சிறப்பாகவும் நல்ல ரிசல்ட்டயும் தருகிறது” என குல்தீப் யாதவ் குறித்து சஞ்சய் பங்கர் தெரிவித்திருந்தார்.

குளித்து யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 73 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 119 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். இருந்த போதும் இவருக்கு சமீபகாலமாக இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.