எங்களோட ஆட்டம் இனி வெறித்தனமா இருக்க போகுது; இலங்கை அணிக்கு சவால் விட்ட ஹர்திக் பாண்டியா !!

எங்களோட ஆட்டம் இனி வெறித்தனமா இருக்க போகுது; இலங்கை அணிக்கு சவால் விட்ட ஹர்திக் பாண்டியா..

முன்பிருந்த மைண்ட் செட்டில் தற்பொழுது இந்திய அணி இல்லை என இந்திய அணியின் டி20 தொடருக்கான கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடர் ஜனவரி 3(இன்று),5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறாத இந்த டி.20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட பட்டாளத்தை இந்திய அணி அறிவித்திருப்பதால்.

இந்தத் தொடர் மற்ற தொடர்களை போன்று இல்லாமல் பெரும்பாலான இளம் வீரர்களை கொண்டு நடைபெறுவதால் இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது என்பதை சோதிப்பதற்கும் ஒரு நல்ல முயற்சியாக உள்ளது என்றும் பெரும்பாலானவர்கள் தெரிவித்து விடுகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடர் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முன்பிருந்த இந்திய அணியின் மைண்ட் செட்டில் தற்பொழுது இந்திய அணி விளையாடப் போவதில்லை என வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில்,“2022 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் எதையுமே தவறாக செய்யவில்லை, எங்களுடைய நோக்கம் மற்றும் செயல்பாடு அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் இருந்தது, ஆனால் உலகக்கோப்பை தொடரில் நாங்கள் எதிர்பாராததே நடந்தது. தற்பொழுது எங்களுடைய அணியின் நோக்கம் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இருந்தது போல் கிடையாது, இந்த வருட புத்தாண்டு தீர்மானமே (New year resolutions) எதிர்வரும் உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான், வேறொரு எந்த ஒரு தீர்மானமும் நான் எடுக்கக் கிடையாது. நிச்சயம் நாங்கள் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம், உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிகள் உள்ளதோ அதை எல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.