எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு… டெஸ்ட் கேப்டன்சியை அஸ்வினுக்கு கொடுங்கள்; வித்தியாசமான ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரவி அஸ்வினை தேர்வு செய்யலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு புதிய தேர்வாளர்கள் குழு நியமிக்கப்பட்டு விட்டதால் இந்திய அணியின் கேப்டன் மாற்றப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது, லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே எல் ராகுல், ரிஷப் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோரில் ஒருவரை இந்திய அணி கேப்டனாக நியமிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால் டெஸ்ட் தொடர் இருக்கான கேப்டனாக இந்தியாவின் யாரை நியமிக்கப்போகிறது என்ற குழப்பம் அனைவர் மத்தியில் எழுந்துள்ளது. கே எல் ராகுலை, ரோஹித் சர்மா இல்லாத டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக இந்தியா அணி அறிவித்திருந்தாலும், அவரின் செயல்பாட்டில் இந்திய அணிக்கு திருப்தி இல்லாததால் வேறொரு வீரரை தான் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக அறிவிக்கும் என தெரிகிறது.
இதன் காரணமாக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமித்தால் நன்றாக இருக்கும் என இந்திய அணிக்கு உலக அளவில் இருக்கும் முன்னாள் வீரர்கள் அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்த இந்திய அணியின் அனுபவ வீரர் ரவி அஸ்வினை கேப்டனாக நியமிக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேனிஷ் கனரியா தெரிவித்ததாவது,“டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு, அனுபவ வீரர் அஸ்வின் மிகத் தகுதியானவர். அவர் இன்னும் அதிகமான கிரிக்கெட் விளையாடுவார், பேட்டிங் மற்றும் பந்திவீழ்ச்சி என இரண்டிலும் புத்திசாலித்தனமாக செயல்படக்கூடிய வீரராக ரவி அஸ்வின் திகழ்கிறார், மேலும் அவர் மைதானத்தில் அதிகம் சிந்திப்பவராகவே காட்சியளிக்கிறார். இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ரவி அஸ்வின் மிகவும் நிதானமாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவி இருக்கிறார்”.
பல சமயங்களில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டும் உள்ளார். அணில் கும்ப்ளே இல்லாத இந்திய அணி எப்படி பலவீனமாக இருந்ததோ அதேபோன்று நிலைதான், தற்போது இந்திய அணியில் நிலவுகிறது அவர் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அடித்த 42 ரன்கள் சதத்திற்கு சமமாகும் என ரவி அஸ்வினை டேனிஷ் கனரியா” வெகுவாக பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது