சதம் அடிக்காதது ஒரு பிரட்சனையே கிடையாது ; ரோஹித் சர்மாவிர்க்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் !!

சதம் அடிக்காதது ஒரு பிரட்சனையே கிடையாது ; ரோஹித் சர்மாவிர்க்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர்..

சதம் அடிக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சஞ்சய் மஞ்சரெக்கார்.

ரோகித் சர்மா-விற்கு நடந்து முடிந்த இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் நன்றாகவே அமைந்தது. ஆனால் அவருக்கு கிடைத்த துவக்கத்தை சரியாக பயன்படுத்தி, அதை மூன்று இலக்க ரன்களாக மாற்ற முடியவில்லை.

முதல் போட்டியில் 67 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து சென்றார்.

2012ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சதம் அடித்துவந்த ரோகித் சர்மா, 2019 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் 5 சதம் அடித்து எந்த ஒரு வீரரும் செய்யாத மகத்தான சாதனையை படைத்த அசத்தியிருந்தார். ஆனால் இவரால் கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அனுபவமிக்க வீரர் இப்படி திணறி வருவது அணிக்கு சற்று பின்னடைவாகவே இருக்கிறது.

கிட்டத்தட்ட 50 ஒருநாள் போட்டிகளுக்கும் மேல் விளையாடிய ரோஹித் சர்மா சதமடிக்கவில்லை என்பதால்இந்திய கிரிக்கெட் வட்டத்தில் தற்பொழுது விவாத பொருளாகியுள்ளார்.ரோஹித் சர்மா சதம் அடிக்காமல் இருப்பதால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா..? அல்லது சதம் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதால் சதம் அடிக்காததை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம..? என்ற விவாதம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

கௌதம் கம்பீர் போன்ற இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மாவின் இந்த பார்ம் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினாலும், கிரிக்கெட் வல்லுனரான சஞ்சய் மஞ்சரேக்கர்., ரோஹித் சர்மா சதம் அடிக்காதது இந்திய அணிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்பாடுத்தவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதில்,“ரோகித் சர்மா சதம் அடிக்காதது எந்த ஒரு பாதிப்பையோ அல்லது அவர் மோசமான ஃபார்மில் உள்ளார் என்பதை காட்ட வில்லை. அவருடைய பேட்டிங்கில் போதுமான ரன்கள் வரவில்லை என்பது உண்மைதான் ஆனால் அவர் ஓரளவு சிறப்பாக தான் விளையாடியுள்ளார். எந்த அணியாக இருந்தாலும் துவக்க வீரர் சதம் அல்லது 150+ ரன்கள் எடுத்தால் அணியின் ஸ்கோர் அதிகமாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்காக சதம் அடித்தால்தான் அணி வெற்றி பெற முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ரோஹித் சர்மா நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மிகச் சிறப்பான பேட்டி வெளிப்படுத்தினார். ஃபுல் ஷர்ட்டுகள் மற்றும் தூக்கி அடித்த ஸ்ட்ரைட் ஷாட்டுகள் என அனைத்துமே சிறப்பாக இருந்தது. இருந்த போதும் அவர் அவுட்சைட் தி ஆப் ஸ்டெம்பில் வீசிய பந்தை விளையாடுவதற்கு தடுமாறியுள்ளார். ஆனால் இந்த தடுமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஏற்க முடியாத ஒன்றாகும்” என ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக சஞ்சய் மஞ்சரெக்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.