ஒருத்தனுக்கும் ஒன்னும் தெரியாது… சும்மா இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்காங்க; கடுப்பில் பேசிய ஸ்ரேயஸ் ஐயர் !!

ஒருத்தனுக்கும் ஒன்னும் தெரியாது… சும்மா இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்காங்க; கடுப்பில் பேசிய ஸ்ரேயஸ் ஐயர்

தன் மீதான விமர்ச்சனங்களை தான் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை என இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு சர்வதேச இந்தியா அணிக்காக அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வளர்ந்து வரும் இளம் வீரராக பார்க்கப்பட்டார்.

ஆனால் இவரால் 2021 ஆம் ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை. குறிப்பாக ஷாட்பாலுக்கு எதிராக தடுமாறுகிறார் என்ற கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இவர், இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்ச ஓரங்கப்பட்டார். 2021 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் உலககோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுப்பதற்கு கடுமையாக போராடிய ஷ்ரேயாஸ் ஐயர் 2022 ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 2022 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 39 போட்டிகளில் பங்கேற்று 1609 ரன்கள் அடித்த அசத்தியிருக்கிறார். அப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் 2022 உலகக் கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தனக்கு ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைகளெல்லாம் வெளி ஆட்களால் ஏற்படுத்தப்பட்டது என வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசுகையில்.,

“ஷாட்பால் விளையாடத் தெரியாது என பிரச்சனையை உருவாக்கியது வெளி ஆட்கள் தான், அனைத்து பேட்ஸ்மாடுகளும் இது போன்ற ஒரு நெருக்கடியான நிலையை சந்தித்து தான் ஆக வேண்டும், குறிப்பாக ஷாட்பாலை அடிக்க முடியாமல் அவுட்டானவர்கள் இருக்கிறார்கள், நானும் அது போன்ற ஒரு நெருக்கடியான நிலையில் தான் சிக்கினேன். ஆனால் நான் கிரிக்கெட் போட்டிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டேன். இருந்த போதும் நான் கடுமையாக முயற்சி செய்து அவர்களுடைய விமர்சனம் தவறு என்பதை நிரூபித்தேன், தற்பொழுது எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது, தற்பொழுது நான் விளையாடுவதை அதிகம் நேசிக்கிறேன் மேலும் என்னுடைய திறமையை தகுதியையும் வளர்த்துக் கொள்வதற்கு கடினமாக முயற்சி செய்வதை விரும்புகிறேன்” என ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.