அவரு பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது; விராட் கோலி குறித்து பாராட்டி பேசிய முன்னாள் வீரர்..
கடந்த இரண்டு வருடங்களாக விராட் கோலி பட்ட கஷ்டத்திற்கு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் நல்ல பலனாக அமைந்துவிட்டது என விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
2019 வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்குப்பின் மோசமான பார்மால் அவதிப்பட்டு வந்த விராட் கோலி, 2022 ஆசிய கோப்பையில் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து டி20 தொடரில் தன்னுடைய முதல் சதத்தையும் பதிவு செய்தார்.
ஒருநாள் தொடர்,டி20 தொடர் என அனைத்திலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிய விராட் கோலி, நடந்து முடிந்த 2022 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அனைவரும் தட்டு தடுமாறிய ஆஸ்திரேலிய மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் அடித்து தன்னுடைய திறமையை மீண்டும் ஒரு முறை உலகறிய செய்தார்.
மேலும் அதற்குப் பின்பு கிடைத்த போட்டிகளில் எல்லாம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி சதம் அடித்து கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கரின் சாதனை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கிங் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய வெகுமான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி இக்கட்டான நிலையில் இருந்தபோதெல்லாம் விராட் கோலிக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டு வந்த விராட் கோலியின் இளம் வயது பயிர் ராஜ்குமார் சர்மா., தற்போது விராட் கோலிக்கு எதிரான தொடரில் சதம் அடித்ததை நினைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமார் சர்மா பேசுகையில்,“விராட் கோலிக்கு கடந்த இரண்டு வருடங்கள் மிக கடினமாக அமைத்தது, விராட் கோலி மீதான எதிர்பார்ப்புகளும் அவர் மீதான விமர்சனங்களும் அதிகமாக பேசப்பட்டது. ஒரு வழியாக விராட் கோலி சதம் அடித்து அந்த விமர்சனத்தை முடிவு பெற செய்துவிட்டார். குறிப்பாக அவர் இலங்கையை அணிக்கு எதிரான பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ததை பார்ப்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருந்தது, நிச்சயம் இதே போன்ற ஆட்டத்தை எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் வரை தொடரும்” எனவும் ராஜ்குமார் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.