ஒரே போட்டியில் பல சாதனைகள்… ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை காலி செய்து புதிய வரலாறு படைத்த  “கிங்” கோலி !!

ஒரே போட்டியில் பல சாதனைகள்… ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை காலி செய்து புதிய வரலாறு படைத்த  “கிங்” கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32வது போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய விராட் கோலி, சுப்மன் கில்லுடன் கூட்டணி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி, அரைசதம் அடித்து அசத்தினார்.

கடந்த சில மாதங்களாக மிஅக் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதன் மூலம் பல்வேறு சாதனைகளும் படைத்து வரும் விராட் கோலி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலமும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இலங்கை அணியுடனான போட்டியின் மூலம் நடப்பு கிரிக்கெட் ஆண்டில் (2023) தனது 1000வது ரன்னை பூர்த்தி செய்த விராட் கோலி, இதன் மூலம் சர்வதேச ஒருநாள் ஒரே வருடத்தில் அதிக முறை 1000+ ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி, விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 7 முறை ஒரே வருடத்தில் 1000+ ரன்களை அடித்திருந்ததே இந்த பட்டியலில் இருந்தது, தற்போது இதனை விராட் கோலி முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

அதே போன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை பூர்த்தி செய்த விராட் கோலி, ஆசியாவில் அதிவேகமாக 8000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அதே போன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக முறை அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இலங்கை வீரர் சங்ககாராவை பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் அதிக முறை அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்;

சச்சின் டெண்டுல்கர் – 21 முறை

விராட் கோலி – 13 முறை

சங்ககாரா – 12 முறை

ஷாகிப் அல் ஹசன் – 12 முறை

ரோஹித் சர்மா – 12 முறை

ஆசியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்;

விராட் கோலி – 159 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் – 188 இன்னிங்ஸ்

சங்ககாரா – 213 இன்னிங்ஸ்

ஜெயசூர்யா – 254 இன்னிங்ஸ்

 

Mohamed:

This website uses cookies.