இவருலாம் கேப்டனானு நினைச்சோம் ஆனால் உண்மையில் நடந்தது வேறு ; ஹர்திக் பாண்டியா குறித்து ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர் !!

இவருலாம் கேப்டனானு நினைச்சோம் ஆனால் உண்மையில் நடந்தது வேறு ; ஹர்திக் பாண்டியா குறித்து ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர்..

ஹர்திக் பாண்டியா சிறந்த கேப்டனாக திகழ்வார் என்பதை ஒருபோதும் நினைத்து கூட பார்க்கவில்லை என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இலங்கை அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதில் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும், சூரியகுமார் யாதவ் துணைக்கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறார். ஆனால் கேஎல் ராகுல் துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா-விற்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று டைட்டில் பட்டதை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா, தன்னுடைய தலைமைத்துறை பண்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Hardik Pandya thanks the fans after the final. Photo: Twitter@gujarat_titans

தற்பொழுது, டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும், சீனியர் வீரர்கள் உள்ளடக்கிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவிற்கு கிடைத்திருக்கும் இந்த பதவி அவருக்கு கிடைத்த வெகுமதி என இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகருமான சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பேசுகையில்,“ஐபிஎல் தொடரின் வெற்றிகர கேப்டனாக ஹர்திக் பாண்டியா திகழ்வார் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஹர்திக் பாண்டியாவாவது கேப்டனாவாவது என்று நாங்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தோம். ஆனால் அவர் அந்த மொத்த தொடரையும் மிக சிறப்பாக வழி நடத்தி தன்னுடைய தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்தியுள்ளார் இப்படி தான் ஒவ்வொரு தலைவர்களும் ஆச்சரியம் கொடுப்பார்கள். தற்போது ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியும் மேலும் மைதானத்தின் மிகச்சிறந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் எனவே இது சரியான நேரத்தில் அவருக்கு கொடுத்த வெகுமியாகும் என ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாகவும் மற்றும் ஒரு நாள் தொடரின் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டது குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டி பேசியிருந்தார்.

Mohamed:

This website uses cookies.