தல தோனியை போன்ற ஒருவர் இனி கிரிக்கெட்டிற்கு கிடைப்பதே ரொம்ப கஷ்டம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !!

தல தோனியை போன்ற ஒருவர் இனி கிரிக்கெட்டிற்கு கிடைப்பதே ரொம்ப கஷ்டம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

தோனி போன்ற ஜாம்பவான்கள் தலைமுறைக்கே ஒரு முறை தான் வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து, வரலாற்றிலேயே எந்த ஒரு கேப்டனும் செய்திடாத மகத்தான சாதனை படைத்து தனக்கென ஒரு தனி வரலாறு உருவாக்கிய இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டாலும் அவருடைய புகழ் பாடல் இன்றளவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக இந்திய அணி 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்ளவிருப்பதால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை முன்னுதாரணமாக காட்டி இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பாடம் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்தும் இந்திய அணி இடம் பெற்றிருக்கும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

தோனி குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்,“தோனி போன்ற ஒரு மகத்தான கேப்டன் தலைமுறைக்கே ஒரு முறை தான் வருவார். தோனியின் செயல்பாடு மற்றும் அவருடைய சமயோதன புத்தி என அனைத்துமே மிக சிறப்பானதாகும். அவர் இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனியின் வாழ்க்கை அனைவருக்கும் பாடமாக உள்ளது.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி போன்று ஒரு சிலரே தோன்றுவார்கள்.அவர்களின் வருகைக்கு பிறகு புதிய காலமே துவங்கிவிடும்,அப்படிப்பட்ட புகழுக்கு தோனியே உரித்தானவர். தோனி தான் விளையாடிய காலங்களில் தனித்துவமான வீரராகவும் தனித்துவமான கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார். தோனியை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்தளவிற்கு தோனி மிக சிறந்த வீரர்.

ஆனால் தற்போது நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேப்டனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தொடரிலும் இந்திய அணி ஒரு புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கிறது. இந்திய அணியின் ரெகுலர் கேப்டன் ரோகித் சர்மாவை விட கடந்த காலங்களில் அதிக ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான்தான் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்” என்றும் ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.