இந்திய அணியிடம் இருக்கும் பக்குவம் பாகிஸ்தான் அணியிடம் இல்லை ; வேதனையை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் !!

இந்திய அணியிடம் இருக்கும் பக்குவம் பாகிஸ்தான் அணியிடம் இல்லை ; வேதனையை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ..

இந்திய அணியிடம் இருக்கும் தெளிவு பாகிஸ்தான் அணியிடம் சுத்தமாக கிடையாது, என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

நேற்று(ஜனவரி -1) பிசிசிஐ நடத்திய முக்கிய கூட்டத்தில், 2023 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் மற்றும் இந்திய வீரர்களின் உடற்தகுதி போன்ற முக்கியாம விஷயங்களில் முடிவெடுத்துள்ளனர். இதனால் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திர வீரர்கள் 2023 ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவார்களா.. மாட்டார்களா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் பனிச்சுமையின் காரணமாகவே காயம் அடைந்துள்ளதால், அது போன்ற தவறு இனிமேலும் நடக்கக்கூடாது என இந்திய அணி இதுபோன்ற, ஒரு புது முயற்சியை செயல்படுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய முயற்சி ஐபிஎல் தொடரில் இடம் பெற்றிருக்கும் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்திய அணியின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து அதிகமான கருத்துக்களை பேசி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா, சர்வதேச போட்டிகளுக்கு இந்திய அணி கொடுக்கும் முக்கியத்துவம் பாகிஸ்தான் அணியிடம் சுத்தமாக கிடையாது என பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்தும் இந்திய அணியை பாராட்டியும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனரியா தெரிவித்ததாவது, “நிச்சயம் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றிருக்கும் புத்திசாலிகள் , பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவை புரிந்து கொள்வார்கள். பிசிசிஐ மற்றும் Nca ஆகிய இரு நிர்வாகமும் சேர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுடைய பணிச்சுமையை குறைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இது போன்ற ஒரு முயற்சியை பாகிஸ்தான் அணியில் நீங்கள் பார்க்கவே முடியாது, ஏனென்றால் பாகிஸ்தான் அணி நாட்டுக்காக விளையாடுவதை விட PSL தொடருக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்”.

“பிசிசிஐ இந்த முடிவுக்கு ஐபிஎல் தொடரில் இடம் பெற்றிருக்கும் அணிகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஏனென்றால் கடந்த முறை மற்றும் ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாததால் இந்திய அணி எவ்வளவு சிரமப்பட்டது என்பதை பார்த்திருக்கிறோம் மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பணிச்சுமையின் காரணமாக இதே போன்று இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டால் அது நிச்சயம் இந்திய அணியை கடுமையாக பாதிக்கும். எனவே தன்னுடைய முக்கிய வீரர்களின் எதிர்காலத்தை உணர்ந்து பிசிசிஐ எடுத்து இருக்கும் இந்த முடிவு சிறப்பானது” என டேனிஸ்கனரியா இந்திய அணியின் இந்த முடிவை பாராட்டி பேசியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.