தென்னாப்பிரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணி, தற்போது மே.இ.தீவுகளில் நடைபெற்ற மூன்று ஆட்ட தொடர்களிலும் அமோக வெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க தொடர்: இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெறவுள்ள 3 டி20, 3 டெஸ்ட் ஆட்டங்கள் தொடரில் பங்கேற்று தென்னாப்பிரிக்க ணி விளையாட உள்ளது. வரும் 15ஆம் தேதி தர்மசாலாவில் முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது.
விராட் கோலியின் அணி, மே.இ.தீவுகளில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி உற்சாகத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஒருநாள் உலகக் கோப்பையில் மோசமான தோல்வியோடு வெளியேறிய தென்னாப்பிரிக்க அதில் இருந்து இன்னும் மீளவில்லை.
டி காக் புதிய கேப்டன்: குயிண்டன் டி காக்கை புதிய கேப்டனாக நியமித்து, மூத்த வீரர் டூபிளெஸ்ஸிஸை அணியில் நீக்கி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் எழுச்சி பெறும் உத்வேகத்துடன் உள்ளது அந்த அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் முடிவுற்றதும், டெஸ்ட் தொடரில் 2 அணிகளும் மோதுகின்றன.
3 டெஸ்ட் ஆட்டங்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடக்கிறது. இந்த சாம்பியன்ஷிப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
டி20 தொடர் விவரம்: (டி20 ஆட்டங்கள் இரவு 7 மணிக்கு தொடங்கும்.)
- முதல் டி20: செப். 15, தர்மசாலா,
- இரண்டாவது டி20: செப். 18, மொஹாலி,
- மூன்றாம் டி20: செப். 22, பெங்களூரு.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: (டெஸ்ட் ஆட்டங்கள் காலை 9.30 மணிக்கு தொடங்கும்)
- முதல் டெஸ்ட், அக். 26, விசாகப்பட்டினம்,
- இரண்டாவது டெஸ்ட், அக். 1014, புணே,
- மூன்றாவது டெஸ்ட், அக். 1923, ராஞ்சி.
அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வரிசையில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா அல்லது ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா எனத் தெரியவில்லை.
இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது:
”இந்திய அணியின் தேர்வுக்குழு மே.இ.தீவுகள் தொடர் முடிந்த பின் பேசி இருக்கிறோம். அடுத்துவரும் தொடரில் உறுதியாக ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிப்போம். அப்போது ரோஹித் சர்மா குறித்துப் பேசுவோம்.
அதேசமயம், கே.எல். ராகுலும் மிகச்சிறந்த திறமை உடையவர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது கடினமான நேரமாக இருக்கிறது. அவரின் பேட்டிங் ஃபார்ம் இப்போது கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. அதிகமான நேரம் விக்கெட்டை நிலைப்படுத்தும் வகையில் ராகுல் விளையாட வேண்டும். தொடர்ந்து பேட்டிங்கில் பயிற்சி பெற வேண்டும்.
குல்தீப் யாதவ், மற்றும் யஜுவேந்திர சாஹல் இருவரையும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்குத் தயார் செய்யும் விதத்தில் இருக்கிறோம்.
சுழற்பந்துவீச்சில் புதுமைகளையும் புதிய வீரர்களையும் அறிமுகம் செய்யும் வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்”.
இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.