வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் மூன்று போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட கொண்ட டி.20 தொடர் இன்று துவங்குகிறது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இளம் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஸ்னோய் முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக சேர்க்கபப்ட்டுள்ளார். அதே போல் ஹர்சல் பட்டேல், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்களும் முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;
இஷான் கிஷன், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், ரவி பிஸ்னோய், யுஸ்வேந்திர சாஹல்.
முதல் டி.20 போட்டிக்கான விண்டீஸ் அணி;
பிராண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரவ்மன் போவல், கைரன் பொலார்ட், ராஸ்டன் சேஸ், ரோமோரியோ செப்பர்ட், அகெல் ஹூசைன், ஓடின் ஸ்மித், பேபியன் ஆலன், ஷெல்டன் கார்டல்.