இந்த இரண்டு பேரும் தேவை இல்ல… முதல் டி.20 போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, இந்தியா விண்டீஸ் இடையேயான முதல் டி.20 போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் இன்று துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு (29-7-22) பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்தியா விண்டீஸ் இடையேயான முதல் டி.20 போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, முதல் டி.20 போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார்.

முதல் டி.20 போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட்டே ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என கணித்துள்ள ஆகாஷ் சோப்ரா, மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை எடுத்துள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஜடேஜா காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாவிட்டால் அக்‌ஷர் பட்டேலிற்கு இடம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் அஸ்வினை விட குல்தீப் யாதவிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, அடுத்ததாக ஆவேஸ் கானிற்கு பதிலாக அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதே போல் ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார் ஆகியோரையும் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர்/ தீபக் ஹூடா,சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா/ அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், அர்ஸ்தீப் சிங்.

Mohamed:

This website uses cookies.