இந்திய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று பிரையன் லாரா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான விண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீரரான சிம்ரன் ஹெய்ட்மயர் மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடாத ரவீந்திர ஜடேஜாவும் இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். இளம் வீரரான அர்ஸ்தீப் சிங்கிற்கும் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களுக்கும் இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.
இந்திய அணியின் ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திர அஸ்வின், அர்ஸ்தீப் சிங்.
விண்டீஸ் அணியின் ஆடும் லெவன்;
சம்ராஹ் ப்ரூக்ஸ், சிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவுல், நிக்கோலஸ் பூரண், கெய்ல் மெயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகெல் ஹூசைன், ஓடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், ஓபட் மெக்காய், கீமோ பவுல்.