வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
அஹமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயஸ் ஐயருக்கு மீண்டும் அணியில் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் கே.எல் ராகுல் மற்றும் தீபக் ஹுடா ஆகியோருக்கு மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதே போல் யுஸ்வேந்திர சாஹல் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் இந்த போட்டிக்கான விண்டீஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. அகெல் ஹூசைன் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹைடன் வால்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசீத் கிருஷ்ணா.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான விண்டீஸ் அணி;
ஷாய் ஹோப், பிராண்டன் கிங், டேரன் பிராவோ, ஷம்ராஹ் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர், பேபியன் ஆலன், ஓடின் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், ஹைடன் வால்ஸ், கீரம் ரோச்.