இரண்டாவது டி.20 போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணியின் கேப்டன் பொலார்ட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் இரண்டாவது போட்டிக்கான விண்டீஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. பேபியன் ஆலன் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கபப்ட்டுள்ளார்.

இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், ரவி பிஸ்னோய், யுஸ்வேந்திர சாஹல்.

இரண்டாவது டி.20 போட்டிக்கான விண்டீஸ் அணி;

பிராண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரோவன் பவுல், கைரன் பொலார்ட், ஜேசன் ஹோல்டர், ஓடின் ஸ்மித், ரோஸ்டன் சேஸ், அகெல் ஹூசைன், ரோமரியோ செப்பர்ட், ஷெல்டன் கார்டல்.

Mohamed:

This website uses cookies.