உன்னுடைய கிரிக்கெட் எதிர்காலமே இந்த 2 விஷயத்தில் தான் அடங்கியுள்ளது ; ஷ்ரேயாஸ் ஐயரை எச்சரித்த முன்னாள் வீரர்..
ஷ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் கரியரே இந்த 2 விஷயத்தில் தான் அடங்கியுள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்பொழுது பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்,இதுவரை இந்திய அணிக்காக 10 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 632 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஓய்வெடுத்து வரவும் ஷ்ரேயாஸ் ஐயர் எப்படியாவது,ஒரு நாள் உலக கோப்பைy தொடரில் மீண்டும் இந்திய அணியில் எப்படியாவது விளையாட வேண்டும் என்ற கனவோடு காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் உலகக்கோப்பை தொடரில் பங்கு பெறுவதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பது உட்பட அவர் செய்யும் தவறு என்ன என்பதையும் சுட்டிக்காட்டி அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
அதவையில் இந்திய கிரிக்கெட்டில் நடைபெறும் விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா., ஷ்ரேயாஸ் ஐயர் தவறு செய்யும் விஷயம் குறித்தும் அந்த தவறை சரி செய்யவில்லை என்றால் அவரின் கிர்க்கெட் கரியருக்கு ஆபத்து என்றும் தன்னுடைய யூட்யூப் சேனலின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்ததாவது., “ஷ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த வீரர், நியூசிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். ஆனால் டெஸ்ட் தொடரை பொருத்தவரையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் என்பது தேவை. வங்கதேசம் அணிக்கு எதிராக போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்துவீச்சாளர்களை மிக எளிதாக கையாளுகிறார், அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது”.
“ஆனால் ஸ்விங் பந்துவீச்சையும் சாட் பாலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறுகிறார். இந்த இரண்டு விஷயத்தை அவர் சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த விஷயத்தை வைத்து தற்பொழுது அவரை முடிவு செய்து விட முடியாது. அவர் இன்னும் அந்த பார்மட்டில் விளையாடவில்லை. நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயரால் ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாட முடியும். டெஸ்ட் போட்டி பொருத்தவரையில் அவரிடம் இன்னும் அதிகம் முன்னேற்றம் தேவை. அவருடைய கேப்டன்ஷிப் குறித்து நாம் தற்பொழுது விவாதிக்க தேவையில்லை” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது