லிமிடெட் ஓவர் போட்டியில் விளையாட ரஹானே-வுக்கு விவரம் பத்தாது ;வாயை கொடுத்து மாட்டிகொண்ட முன்னாள் வீரர் !!

லிமிடெட் ஓவர் போட்டியில் விளையாட ரஹானே-வுக்கு விவரம் பத்தாது ;வாயை கொடுத்து மாட்டிகொண்ட முன்னாள் வீரர்…

லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியில் ரஹானேவிற்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீர ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 

நடந்து முடிந்த ரஞ்சிக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த ரஹானே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டை பெற்றது மட்டுமில்லாமல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ரஹானேவிர்க்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்பளித்தது போல் லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என ஒரு சில முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஆனால்(ஒயிட்பால் போட்டியில்) ஐபிஎல் தொடரில் மட்டுமே நீண்ட நாட்களுக்குப் பிறகு பங்கேற்று விளையாடிய ரஹானேவை, லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாட வைப்பது முட்டாள்தனமான முடிவாகும் என்று ஒரு சிலர் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

என்னை மன்னிச்சிருங்க ரஹானே…

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா., ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிவிட்டார் என்பதற்காகவே ரஹானேவை ஒரு நாள் தொடரில் விளையாட வைக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதில்,“ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டார் என்பதற்காகவே அவரை லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாட வைக்க கூடாது. அப்படி செய்வது சரியான முறை கிடையாது, இது சம்பந்தமாக பிசிசிஐ-யின் முன்னால் பிரசிடெண்ட் கங்குலியம் பேசியிருந்தார். எதற்காக அவருக்கு துணை கேப்டன் பதவியை கொடுக்கிறார்கள் என்றும், 18 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடிய ரகானே ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டார் என்பதற்காக இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிப்பது முறை கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்”.

“நான் தற்பொழுது ரஹானேவிற்கு எதிராக பேசவில்லை ஆனால் இந்திய அணியின் மனநிலையை குறித்து பேசுகிறேன், ரஹானேவை பொறுத்தவரையில் டி.20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கு அவர் இன்னும் தகுதிபெறவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி அதிவேக அரை சதம் அடித்துள்ளார். அவருடைய பேட்டிங் உண்மையில் சிறப்பாக இருந்தது, ஆனால் அது ஈடன்கார்டன் மைதானமும் பவர் ப்ளேயும் அவருக்கு உறுதுணையாக இருந்தது,ஆனால் சென்னை போன்ற மைதானங்களில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. தற்போதைய இந்திய அணியில் ரகானேவிற்கான பேட்டிங் ஆப்சனும் கிடையாது, என்னை பொருத்தவரையில் லிமிடெட் போட்டிகளில் ரகானேவிற்கு வாய்ப்பு கிடையாது என்றும் என்னை மன்னித்து விடுங்கள் ரஹானே” என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.